இடுகைகள்

koothanur kovil

என்னோட நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . சமிபத்துல நான் சென்று வந்த இடங்களை பற்றி சொல்ல போறேன் . வைதீஸ்வரன் கோவில் சென்றபொது   கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு சென்றேன் அங்கு கல்விக் கடவுள் சரஸ்வதிக்கு தனி சன்னதி உள்ளது. பள்ளிக்கு குழந்தைகளை சேர்பதற்கு முன் இந்த கோவிலில்  பிரார்த்தனை செய்து கொண்டால் குழந்தைகளுக்கு சரஸ்வதி கடாட்சம்  கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை . எல்லா கோவிலை போலவே இங்கும் மதியம் 1 லிருந்து 4 வரை நடை சாத்தப்படுகிறது. கோவிலுக்கு வெளியிலேயே புத்தக கடைகள் உள்ளன இங்கு வரும் பக்தர்கள் பேனா பென்சில் பல்பம் நோட்டு தேன் தாமரை பூ  போன்றவற்றை கொண்டு அர்ச்சனை செய்து கொள்கிறார்கள் . இந்த கோவில் மயிலடுதுரைஇலிருந்து 32  km தொலைவில் உள்ளது. அதே போல் கூத்தனுரிளிருந்து மயிலாடுதுறை வரும்  வழியில் திரு மெய்சூர் உள்ளது இங்கு லலிதாம்பிகை கோவில் உள்ளது இங்கு தான் லலிதா சகஸ்ரநாமம் பாடல் பாடப் பெற்றது. இவ் வழியே செல்ல வாய்ப்பு கிடைக்கும் போது இந்த கோவில்களுக்கு சென்று இறை அருள் பெறவும்
சமீபத்திய இடுகைகள்